362

4 பாலை

(37) முன்னிலைப் பத்து


362. 1பதுக்கைத் தாய வொதுக்கருங் கவலைச்
    சிறுகண் யானை யுறுபுகை நினையா
    தியாங்குவந் தனையோ பூந்தார் மார்ப
    அருள்புரி நெஞ்ச முய்த்தர
    இருள்பொர நின்ற விரவி னானே.

   எ-து சேணிடைப்பிரிந்த தலைமகன் இடைநிலத்துத் தங்காது
இரவின் கண் வந்துழித் தோழி சொல்லியது.

   குறிப்பு. பதுக்கை - கற்குவியல்; ஐந். எழு : 30, 38 உதுக்கருங்
கவலை-போதற்கரிய கவர்ந்த வழி; கலித் 150 : 16. யானையுறுபகை:
ஐங் 314 : 3-4 யாங்கு-எப்படி. உய்த்தர-செலுத்த இரவினானே
யாங்கு வந்தனையோ.

   (மேற்) மு. சேணிடைப் பிரிந்து தலைவன் இரவின்கண் வந்
துழித் தோழி கூறியது (தொல். கற்பு, 9, ந) (பி-ம்) 1‘பதுக்கை
தாய’ ( 2 )