371

4 பாலை

(38) மகட்போக்கிய வழித் 1தாயிரங்கு பத்து


371. மள்ளர் 2கொட்டின் மஞ்ஞை யாலும்
   உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச்
   சுரநனி 3யினிய வாகுக தில்ல
   அறநெறி யிதுவெனத் தெளிந்தவென்
   பிறைநுதற் குறமகள் போகிய 4சுரனே.

    குறிப்பு. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ தேவர்பிரான் கவிராயரவர்கள்
வீட்டுக் கையெழுத்துப் பிரதியில் இந்தச் செய்யுளும் அடுத்த
செய்யுளும் காணப்படவில்லை: இவைகள் இருத்தற்குரிய இடத்தில்
“வயங்குகதிர்” ஞாயிறு திருகலி னீரறுபு, கயந்துக ளாகிய வியந்தபு
கொள்கையொ, டின்னா வாயினு மினிய வாகுக, காதல னயந்துபா
ராட்டவென், மாதர் மடப்பிடி போகிய சுரனே” என்னும் செய்யு
ளொன்றே எழுதப்பட்டிருந்தது.

   மள்ளர் - வீரர். கொட்டின் - பறையை முழக்கினால். மஞ்ஞை-
மயில். தலைஇ-பெய்து அறறெநி-தருமான வழி. தெளிந்த -
ஆய்ந்தறிந்த. சுரன் மழைதலைஇ இனியவாகுக.

  (மேற்) மு. ‘இதனுள் அறறெறி இதுவெனத்தெளிந்த என்...
மகளென்று தாய் கூறவே உடன்போக்குத் தருமமென்று மகிழ்ந்து
கூறி அங்ஙனம் கூட்டிய நல்வினையைத் தன் நெஞ்சிற்கு விளக்கிப்
புலம்பியவாறு காண்க’ (தொல். அகத். 36, ந.) நற்றாய் சுரம்
தணிவித்தல் (நம்பி, வரைவு. 16); தமிழ்நெறி விளக்கம்,23.)

   (பி-ம்) 1‘ தாயிரங்குப் பத்து’,‘தாயிரங்கிய பத்து’ 2‘கொட்டு
மஞ்ஞை’ 3‘இனிதெனத்’ 4‘கானே’