372

4 பாலை

(38) மகட்போக்கிய வழித் 1தாயிரங்கு பத்து


372. என்னு முள்ளினள் கொல்லோ தன்னை
   நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொ
   1டழுங்கன் மூதூ ரலரெழச்
   செழும்பல் குன்ற மிறந்தவென் மகளே.

    குறிப்பு. என்னும் - என்னையும் உள்ளினள் கொல்லோ-நினைத்
தாளோ. நெஞ்சு உண-தலைவி நெஞ்சு கேட்க. வஞ்சினம்-சூள்.
அழுங்கல் மூதூர்-இரக்கத் தையுடைய பழமையான ஊரில்: கலித்.
23 : 5. இறந்த - கடந்த. என் மகள் உள்ளினள் கொல்லோ.

    (மேற்) இது நற்றாய் தலைமகள் கொடுமை நினைந்து கூறியது
(தொல். அகத் 39, இளம்); இஃது ‘என்னை நினைப்பாளோ’
என்றது (தொல். அகத். 36, .) (பி-ம்) 1‘டழுங்கின்’ ( 2 )