எ-து தலைமகளைத் தலைமகன் கொண்டு கழிந்த கொடுமை
நினைந்து நற்றாய் சொல்லியது.
(ப-ரை) இவட்காக யான் பட்ட துயரம் அவன் தாயும் பட
வேண்டும் எ-று.
குறிப்பு. நினைத்தொறும் - நினைக்குந்தோறும். கலிழும் இடும்பை-
அழுகின்ற துன்பத்தை. புலிக்கோள். பிழைத்த-புலியால் கொள்ளப்
படுவதிலிருந்து தப்பின. கவைக்கோடு - கவர்த்த கொம்பு. பிணை-
பெட்டை. விளிக்கும் - கத்துகின்ற. வெஞ்சுரத்தில் என் மகளை
உய்த்த. வல்வில்-ஒரே காலத்தில் பல பொருள்களை ஊடுருவிச்
செல்லும்படி அம்பை எய்யும் வில்; ஐங். 390 : 3; குறுந். 100 : 5.
தாய் இடும்பை எய்துக.
(மேற்.) மு. இஃது அச்சம் கூறிற்று. (தொல். அகத். 36, ந.) ( 3 )