376

4 பாலை

(38) மகட்போக்கிய வழித் 1தாயிரங்கு பத்து


376. நாடொறுங் கலிழு மென்னினு மிடைநின்று
   காடுபடு தீயிற் 1கனலியர் மாதோ
   நல்வினை நெடுநகர் கல்லெனக் கலங்கப்
   பூப்புரை யுண்கண் மடவரற்
   2போக்கிய புணர்த்த வறனில் பாலே.

    எ-து தலைமகள் போயவழி நற்றாய் விதியை வெகுண்டு
சொல்லியது.

   குறிப்பு. கலிழும்-கலங்கும். தீயின்-தீயைப்போல கனலியர்
கொதித்திடுக. பூப்புரை-பூவையொத்த. கண்ணையுடைய மடவரல்
என்றது தலைவியை. போக்கிய புணர்த்த - உடன்போக்கு நேரப்
பொருத்திய. அறன் இல் பால் - தருமமில்லாத பழவினை. பால்
கனலியர்.

   (மேற்.) மு. இது தீவினையை வெகுண்டு புலம்பியது ( தொல்.
அகத்.36, ந.)

    (பி-ம்) 1‘கனலிய’ 2‘போகிய’ ( 6 )