384

4 பாலை

(39) உடன் போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து


384. சேட்புல முன்னிய 1வசைநடை யந்தணிர்
    நும்மொன் றிரந்தனென மொழிவ லெம்மூர்
    2யாய்நயந் தெடுத்த வாய்நலங் 3கவின
    ஆரிடை யிறந்தன ளென்மின்
    நேரிறை முன்கையென் னாயத் தோர்க்கே.

    எ-து உடன்போகிய தலைமகள் ஆண்டு எதிர்வரும் அந்
தணர்க்குச் சொல்லியது.

   குறிப்பு. சேட்புலம் - நெடுந்தூரத்திலுள்ள இடத்தை. முன்னிய-
கருதிய. அசைநடை அந்தணிர் - அசைந்த நடையையுடைய அந்த
ணரே; விளி நும்மை ஒன்று இரந்தனென். யாய் நயந்தெடுத்த ஆய்
நலம் - அன்னை விரும்பி எடுத்த எமது அழகிய பெண்மை நலம்’
நற். 23 : 4; குறுந். 223 : 6; அகநா. 146 : 13, 195 : 9-10. கவின-
கவின் பெற. ஆரிடை - கடத்தற்கரிய வழியை, இறந்தனள் என்
மின்-கடந்தனள் என்று கூறுங்கள். நேரிறை முன்கை என் ஆயத்
தோர்க்கு-நேரிய திரண்ட முன்கையை யுடைய என் ஆயத்தவர்க்கு.
அந்தணிர் என் ஆயத்தோர்க்கு ‘இறந்தனள்’ என்மின்.

    (மேற்.) மு. தலைவி இடைச்சுரத்து ஆயத்தார்க்குச் சொல்லி
விட்டது (தொல். அகத் 45, இளம் 42, ந. ); வரைவு 28.

   (பி-ம்) 1‘விரைநடை’ 2‘தாய்நயந்’ 3‘கவின் பெற’ ( 4 )