386

4 பாலை

(39) உடன் போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து


386. புன்கண் யானையொடு புலிவழங் கத்தம்
    நயந்த காதலற் புணர்ந்துசென் றனளே
    நெடுஞ்சுவர் நல்லின் மருண்ட
    இடும்பை யுறுவிநின் கடுஞ்சூன் மகளே.

    எ-து புணர்ந்துடன் போகிய தலைமகளை இடைச்சுரத்துக் கண்
டார் அவள் தாய்க்குச் சென்று கூறியது.

    குறிப்பு. புன்கண் யானை - துன்பத்தைத் செய்யும் யானை.
அத்தம்-அருநெறியை. காதலனைப் புணர்ந்து சென்றனள். இடும்பை
உறுவி-துன்பத்தை அடைந்தவளே; என்றது நற்றாயை நோக்கிய
விளி. கடுஞ்சூல்-முதற்சூல்; ஐங். 309 : 3, குறிப்பு உறுவி,
நின்மகள் சென்றனள்.

   (மேற்) மு. நற்றாய்க்கு அந்தணர் மொழிதல்: நம்பி. வரைவு. 28.