389

4 பாலை

(39) உடன் போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து


389. செய்வினைப் பொலிந்த செறிகழ னோன்றாள்
    மையணற் காளையொடு பைய வியலிப்
    பாவை யன்னவென் னாய்தொடி மடந்தை
    சென்றன ளென்றி ரைய
    ஒன்றின வோவவ ளஞ்சிலம் படியே.

    எ-து பின்சென்ற செவிலித்தாய் வினவப்பட்டோர், ‘கண்
டோம் என்புழிச் சொல்லியது.?

   குறிப்பு. செய்வினை - வேலைப்பாடுகள், நோன்தாள் - வலிய
பாதம் மையணற்காளை-மயிராற் கறுத்த கன்னத்தையுடைய
தலைவன்: பு, வெ. 12; புறநா. 83 : 1. பையஇயலி- மெல்ல நடந்து.
என்றீர்- என்றீர்கள் ஐய : விளி மடந்தை காளையொடு பைய
இயலிச் சென்றனள் என்றீர், அவள் அடி ஒன்றினவோ.

   (மேற்.) மு. செவிலி சுரத்திடை வினாஅயது (தொல். அகத்.
40, இளம்.) ( 9 )