405

5. முல்லை

(41) செவிலிகூற்றுப் பத்து


405. ஒண்சுடர்ப் பாண்டிற் செஞ்சுடர் போல
   மனைக்குவிளக் காயினண் மன்ற கனைப்பெயற்
   பூப்பல வணிந்த வைப்பிற்
   புறவணி நாடன் புதல்வன் றாயே.

     குறிப்பு. பாண்டிற் செஞ்சுடர்-கால்விளக்கிலுள்ள செவ்விய
தீபம், பெயல்-பெய்தற்றொழிலையுடைய மேகம். வைப்பு-இடங்கள்.
புதல்வன் தாய் என்றது பயன்பெற்றதைக் கூறியது; ஐங். 90 : 4,
குறிப்பு ; ?நன்கலம் நன்மக்கட்பேறு? (குறள் 60). புதல்வன் தாய்
மனைக்கு விளக்காயினாள் : ?மனைக்கு விளக்க மடவாள்? (நான்
மணிக்.
105.) ( 5 )