406

5. முல்லை

(41) செவிலிகூற்றுப் பத்து


406. மாத ருண்கண் மகன்விளை யாடக்
    1காதலித் தழீஇ யினிதிருந் தனனே
    தாதார் பிரச 2மூதும்
    போதார் புறவி னாடுகிழ வோனே.

     குறிப்பு. மாதர்-காதலையுடைய, காதலியைத் தழீஇ. பிரசம்-
வண்டு; ஐங். 417 : 3, போதார்-மலர்நிறைந்த. கிழவோன் இருந்
தனன்.

   (மேற்.) மு. தலைவன் பரத்தையிற் பிரிவொழிந்து மனைக்கண்
இருந்தது (தொல். கற்பு. 31, ந.)

  (பி-ம்.) 1 ‘காதலிற் றழீஇ? 2 ‘முரலும்? ( 6 )