408

5. முல்லை

(41) செவிலிகூற்றுப் பத்து


408.பாணர் முல்லை பாடச் சுடரிழை
   வாணுத லரிவை முல்லை மலைய
   இனிதிருந் தனனே நெடுந்தகை
   துனிதீர் கொள்கைத்1தன் புதல்வனொடு பொலிந்தே.

     குறிப்பு.. முல்லை-முல்லைப்பண். முல்லை மலைய-முல்லைமலரைச்
சூட, முல்லைசூடல் கற்பின் மிகுதியைக் குறிக்கும்; சிறுபாண். 30. .;
தக்க 119. துனி-வெறுப்பு நெடுந்தகை பொலிந்து இனிதிருந்தனன்.

  (மேற்) மு. இது வாயில் தம்முட்கூறியது (தொல். கற்பு. 11,
இளம்.) (பி-ம்.) 1 ‘தம்?