45

(5) புலவிப் பத்து


45. கூதி ராயிற் றண்கலிழ் தந்து
   வேனி லாயின் மணிநிறங் கொள்ளும்
   யாறணிந் தன்றுநின் னூரே
   பசப்பணிந் தனவான் மகிழ்நவென் கண்ணே.

  எ-து நெடுநாள் பரத்தையரிடத்தனாய் ஒழுகிய தலைமகன்
மனைவயிற் சென்றுழித் தோழி சொல்லியது.

  (ப-ரை.) கலங்குதலும் தெளிதலும் உடைத்தாகிய யாற்றி
யல்பும் பெறாது என்றும் பசந்தே ஒழுகுகின்றாள் இவளென்பதாம்.

  குறிப்பு. கூதிர் - கூதிர்காலம் தண் கலிழ்தந்து - குளிர்ந்த
கலங்கிய நீரைத் தந்து. மணி நிறம் - நீலமணியின் நிறத்தை. யாறு
அணிந்தன்று - ஆற்றை அணிந்தது. நின்னூர் யாறு அணிந்தன்று;
என் கண் பசப்பணிந்தன. என் கண் என்றாள், ஒற்றுமைபற்றித்
தோழி தலைவி உறுப்பினைத் தன்னுறுப்பென்றல் மரபாதலின்; தொல்,
பொருள். 27; நற். 28.
                                    ( 5 )