46

(5) புலவிப் பத்து


46. நினக்கே யன்றஃ தெமக்குமாரினிதே
   நின்மார்பு நயந்த நன்னுத லரிவை
   வேண்டிய குறிப்பினை யாகி
   ஈண்டுநீ யருளா தாண்டுறை தல்லே.

  எ-து மனைக்கண் வருதல் பரத்தை விலக்க விலங்கிப் பின்பு
உலகியல்பற்றி அவள் குறிப்பினோடும் வந்தமை அறிந்த தோழி தலை
மகனைப் புலந்து சொல்லியது.

 (ப-ரை.) இவ்வாறு வருதலின் வராமையே இனிதென்பதாம்.

 குறிப்பு. நயந்த - விரும்பிய. நன்னுதலரிவை யென்றது பரத்
தையை. மார்பு நயந்த அரிவை: குறுந். 73 : 1, குறிப்பினையாகி-
குறிப்பையுடையவனாகி. ஈண்டு நீ அருளாது - இங்கு வந்து எங்களை
அருள் செய்வதொழித்து. ஆண்டு உறைதல் - அப்பரத்தையின்
இல்லிலேயேதங்கியிருத்தல். ஆண்டு உறைதல் எமக்கும் இனிது.

   (மேற்.) மு. பிறள்மாட்டுத் தங்கிய ஒழுக்கத்துக் கிழவனைத்
தாழ்ந்து எங்கையர்க்கு உரையென வேண்டிக் கோடற்கண்ணும்
தலைவிக்குக் கூற்று நிகழும். (தொல். கற்பு. 6, இளம்.); பரத்தையர்
மாட்டு ஒழுகிக் கொடுமை செய்த தலைவன் தலைவியடிமேல் வீழ்ந்து
வணங்குழி எங்கையர் காணின் இது நன்றெனக் கொள்ளார் என
குறிப்பால் இகழ்ந்து கூறிக்காதலமைந்து மாறிய வேறுபாட்டின்கண்
தலைவி கூற்றுநிகழும். (தொல். கற்பு. 6, ந.).                         ( 6 )