எ-து மனையின் நீங்கிப் பரத்தையிடத்துப் பன்னாள் தங்கி
வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.
குறிப்பு. துணையோர்-ஆயத்தார். யாம் என்றது தோழி. வஞ்சி -
ஒருவகை மரம்; மருதத்துக்குரியது. தஞ்சம் : எளிது என்னும்
பொருளை உணர்த்தும் ஓரிடைச் சொல். நின்னை நெஞ்சத்திற்
பெற்ற இவளும் அழும், செல்வமும் யாமும் வருந்துதும், அருளாய். ( 10 )
(5) புலவிப்பத்து முற்றிற்று.