412

5. முல்லை

(42) கிழவன் பருவம்பாராட்டுப் பத்து


412. 1காயா கொன்றை நெய்தன் முல்லை
   போதவிழ் தளவமொடு 2பிடவலர்ந்து கவினிப்
   பூவணி கொண்டன்றாற் புறவே
   பேரமர்க் கண்ணி யாடுகம் விரைந்தே.

இதுவுமது.

   (ப-ரை.) விளையாட்டு நயப்புக் கூறியது.

    குறிப்பு. காயாவும் கொன்றையும் : ஐங். 420 : 1-2 ; குறுந்.
183 : 1-5. நெய்தல் முல்லைக்கு வந்தது. தளவம்-செம்முல்லை.
பிடவு-பிடாமலர். கவினி-அழகுபெற்று. புறவு பூவணி கொண்
டன்று, பேரமர்க்கண்ணி-பெரிய அமர்த்த கண்ணையுடையவள்;
விளி; ?பேரமர்க்கண்? (யா. கா. 1). விரைந்து ஆடுகம்; ஆடுகம்-
விளையாடுவோம்.

   (பி-ம்.) 1 ‘காயக்கொன்றை? 2 ‘பிடவமலர்ந்து? ( 2 )