5. முல்லை
(42) கிழவன் பருவம்பாராட்டுப் பத்து
413. நின்னுத னாறு நறுந்தண் புறவில் நின்னே போல மஞ்ஞை யாலக் கார்தொடங் கின்றாற் பொழுதே பேரிய லரிவை நாநயத் தகவே.
இதுவுமது.
குறிப்பு. நுதல் நாறுதல் : கலித். 14 : 4. நின்னே போல-உன்னைப் போல, அடி, 1-2 : ஐங். 492 : 1-2. நாம் நயத்தக-நாம் விரும்ப. நயத்தகக் கார் தொடங்கின்று.