415

5. முல்லை

(42) கிழவன் பருவம்பாராட்டுப் பத்து


415. இதுவே மடந்தைநா மேவிய பொழுதே
   உதுவே மடந்தைநா முள்ளிய புறவே
   இனிதுடன் கழிக்கி னிளமை
   இனிதா லம்ம 1வினியவர்ப் புணர்வே.

இதுவுமது.

      குறிப்பு. மடந்தை : விளி. நாம் மேவியபொழுது இதுவே,
உள்ளிய புறவு உதுவே. இனியவர் என்றது தலைவியை, புணர்வு
இனிதுடன் கழிக்கின் இளமை இனிது : கலித். 18 : 11-2.

   (பி-ம்.) 1 ‘வினியவர் புணர்வே? ( 5 )