416

5. முல்லை

(42) கிழவன் பருவம்பாராட்டுப் பத்து


416. போதார் நறுந்துகள் கவினிப் புறவில்
   தாதார்ந்து
   களிச்சுரும் பரற்றுங் காமர் புதலின்
   மடப்பிடி தழீஇய மாவே
   சுடர்த்தொடி மடவரற் புணர்ந்தனம் யாமே.

    எ-து பருவங்குறித்துப் பிரிந்த தலைமகன் பருவத்திற்கு முன்னே
வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி அதற்கு இனியனாய்த்
தன்னுள்ளே சொல்லுவான்போன்று தலைவி அறியுமாற்றாற்கூறியது.

   குறிப்பு. துகள்-மகரந்தப்பொடி. கவினி-கவின்பெற்று. காமர்
புதலின்-அழகிய புதரின் கண்ணே. மடவரலை யாம் புணர்ந்தனம். ( 6 )