5. முல்லை
(42) கிழவன் பருவம்பாராட்டுப் பத்து
417. கார்கலந் தன்றாற் புறவே பல வுடன் ஏர்பரந் தனவாற் புனமே யேர்கலந்து தாதார் பிரச மொய்ப்பப் போதார் கூந்தன் முயங்கின ளெம்மே.
இதுவுமது.
குறிப்பு. கார்கலந்தன்று-கார்காலம் கலந்தது. ஏர்-அழகு; ஏருமாம். புனம்-பயிரிடப்பட்ட இடம். புறவு கார் கலந்தன்று, புனம் ஏர்பரந்தன. பிரசம்-வண்டு. கூந்தல் : தலைவி கூந்தல் எம்மை முயங்கினள். ( 7 )