எ-து குறித்த பருவத்திற்கு உதவ வாராநின்ற வழிக்கண் உருவு
வெளிப்பாடு கண்ட தலைமகன் இல்லத்துப் புகுந்துழித் தலைமகட்குச்
சொல்லியது.
குறிப்பு. வானம்பாடி-ஒருவகைப்பறவை. வறம்-வறுமையை.
மழை வறண்ட காலத்து வானம்பாடி மேகத்து நீர்த்துளியை
நச்சிப்பாட மழைதவறாமல் பெய்யும்; அதனால் எல்லாரது துன்பமும்
தீர்தலின், ‘வானம்பாடி வறங்களைந்து? என்றார்; வானம்பாடி மழை
நீரை நினைத்துப் பாடல் : பட். 3-5; கலித். 46 : 20; சீவக. 2897.
அழிதுளி-மிக்கதுளி. தலைஇய-பெய்துவிட்ட. காண்வர வானர
மகளோ-காணுதல் வரத் தெய்வமங்கையோ; என்றது இல்லத்திருப்
பவும் பாலைநிலத்தில் தன்னை முயங்கினமை பற்றி. அடைய-முழு
வதும். முயங்கியோயே, நீ வானர மகளோ. ( 8 )