421

5. முல்லை

(43) விரவுப் பத்து


421. மாலை வெண்காழ் காவலர் வீச
   நறும்பூம் புறவி னொடுங்குமுய லிரியும்
   1புன்புல நாடன் மடமகள்
   நலங்கிளர் பணைத்தோள் விலங்கின செலவே.

    எ-து வினை பலவற்றிற்கும் பிரித்தொழுகும் தலைமகன் பின்பு
மனைவியின் நீங்காது ஒழுகுகின்ற காதலுணர்ந்தோர் சொல்லியது.

   (ப-ரை.) வெண்காழ்-வெளுத்த தடியை. இரியும்-கெட்டு ஓடு
கின்ற, கோலால் எறிந்த முயல் : புறநா. 339 : 4. புன்புலம்-புன்
செய்; முல்லைநிலம். மடமகளது தோள் தலைவன் செலவை விலங்
கின; விலங்கின-தடுத்தன. 421-30 : விரவுப்பத்து; விரவுதல்-
கலத்தல்.

  (பி-ம்.) 1 ‘புன்புன நாடன்? ( 1 )