422

5. முல்லை

(43) விரவுப் பத்து


422. கடும்பரி நெடுந்தேர்க் கால்வல் புரவி
    நெடுங்கொடி முல்லையொடு தளவமல ருதிர
    விரையுபு கடை இநாஞ் செல்லின்
    நிரைவளை முன்கை வருந்தலோ விலளே.

    எ-து மீள்கின்றான் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது.

   குறிப்பு. கடும்பரி நெடுந்தேர்க் கால் வல்புரவி-கடுமையாகப்
பரிதலையுடைய நெடிய தேரினது உருளையை ஓட்டுதலில் வல்ல
குதிரை. தளவமலர்-செம்முல்லைமலர். முல்லையும் தளவமும் : ஐங்.
450. விரையுபு-விரையும்படி. கடைஇ-செலுத்தி. நிரைவளை முன்
கை : குறுந். 335 : 1. வருந்தலோ இலள்-வருந்தாள். ( 2 )