423

5. முல்லை

(43) விரவுப் பத்து


423. மாமழை யிடியூஉத் தளிசொரிந் தன்றே
வாணுதல் பசப்பச் செலவயர்ந் தனையே
யாமே நிற்றுறந் தமையலம்
ஆய்மல ருண்கணு நீர்நிறைந் தனவே.

    எ-து கார்ப்பருவத்தே பிரியக்கருதிய தலைமகற்குத் தோழி தலை
மகளது ஆற்றாமை கூறிச் செலவழுங்குவித்தது.

    (ப-ரை.) இது கார்ப்பருவத்தே கூறுதலான் முல்லையாயி.ற்று.

    குறிப்பு. மழை-மேகம் இடியூஇ-இடித்து. தளி-நீர்த்துளியை.
செலவு அயர்ந்தனையே-பிரிந்து செல்ல விரும்பினயே. நிற்றுறந்து-
உன்னைப் பிரிந்து. அமையலம்-பொருந்த மாட்டோம்.

     அழுங்குவித்தது-தடுத்தது. இப்பாட்டு முதற்பொருளால்
முல்லை. ( 3 )