எ-து வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
குறிப்பு. புன்புறப்பேடை-புல்லிய புறாவின் பேடை, இன்புற-
இன்பத்தையடைய இயவரின்-வாத்தியக்காரரைப்போல,
வல்லை-விரைவில். கடவின்-செலுத்தினால், அல்லல் அருநோய்-
துன்பத்தைத் தருகிற கொடிய நோயை ; அருநோய் ; அருநரகு
என்றாற் போன்றது. தலைவியினது என ஒரு சொல் வருவிக்க. ( 5 )