எ-து ‘பிரியுங்கொல்? என்று ஐயுற்று உடன்படாமை மேற்
கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் 1தான் பிரிவொழிந்ததற்குக்
காரணங்கூறித் தேற்றியது.
குறிப்பு. மடந்தை : விளி. கார் எதிர் பொழுது-கார்காலம்
தோற்றும்பொழுது, விடல் ஒல்லாய்-என்னை விடுதற்குப் பொருந்
தாய். பாசறை-பாடிவீட்டின்கண். அவன் என்றது பகையரசனை.
அழுங்கினன் - தவிர்த்தனன்; தொல். உரி, 54.
(பி-ம்.) 1 ‘தான் இனிப் பிரிவொழிந்த? ( 7 )