429

5. முல்லை

(43) விரவுப் பத்து


429. பல்லிருங் கூந்தல் பசப்பு நீவிடின்
    செல்வேந் தில்ல யாமே செற்றார்
    வெல்கொடி யரண முருக்கிய
    கல்லா யானை வேந்துபகை வெலற்கே.

   எ-து குறிப்பினாற் பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைமகள் உடன்
படுவாளாக வேந்தற்கு உற்றுழிப்பிரியும் தலைமகன் சொல்லியது.

   குறிப்பு. பல்லிருங் கூந்தல்-ஐம்பால்; விளி. பசப்பு-பிரிவையுள்
ளிப் பசத்தலை. செற்றார்-பகைவரது. கல்லா யானை-கொடுந்தொழிலை
யன்றி வேறொன்றையும் கல்லாத யானை. வேந்தினது பகையை
வெலற்குச் செல்வேம். ( 9 )