430

5. முல்லை

(43) விரவுப் பத்து


430. நெடும்பொறை மிசைய குறுங்காற் கொன்றை
   அடர்பொன் னென்னச் சுடரிதழ் பகரும்
   கான்கெழு நாடன் மகளே
   அழுத லான்றிசி னழுங்குவல் செலவே.

   எ-து ‘பிரியுங்கொல்? என்று ஆற்றாளாகிய தலை
மகட்குத் தலைமகன் பருவவரவு கூறி, ‘இதுகாரணத்தாலும் பிரியேன்? எனச்சொல்
லியது.

   குறிப்பு. நெடும்பொறை மிசைய-நெடிய மலையின்மேலுள்ள.
அடர்பொன் என்ன=பொன்னடர் என்ன-பொன்னாலாகிய தகடு
என்னும்படி. பொன்னன்ன கொன்றை : ஐங். 420 : 1. 432 : 2.
பகரும்-கொடுக்கும்; ஐங். 13 : 2. அழுதலான்றிசின்-அழுதல்
அமைவாயாக : சின் : முன்னிலையசை. அழுங்குவல்-கெடுப்பேன்.
செலவு அழுங்குவல். ( 10 )

(43) விரவுப்பத்து முற்றிற்று.