எ-து ‘பிரிவுடம்பட்டும் ஆற்றாயாகின்றது என்னை?’ என்று வின
வியவழி, ‘அவர்போன சுரம்போகற்கரிதென்று ஆற்றேனாகின்றேன்’
என்ற தலைமகட்கு ‘வேனிற்காலம் கழிந்தது; கார்ப்பருவத்
தோற்றத்திலே பிரிந்தாராகலான் அச்சுரம் நன்று’ எனத் தோழி
சொல்லி ஆற்றுவித்தது.
இனி வருகின்ற பாட்டு ஒன்பதுக்கும் இஃது ஒக்கும்.
குறிப்பு. அணிநிற இரும்பொறை-அழகிய நிறத்தையுடைய
பெரிய மலை. மணிநிற உருவின தோகை-நீலமணி நிறத்தைப்
போன்ற அழகுடைய மயிலையும். ஆறு உடைத்து.
(மேற்.) 431-40, இப்பாட்டு முதலிய பத்தும் முல்லையுட் பாலை
(தொல். அகத், 9. ந,)
(பி-ம்) 1 ‘விரும்புறம்’, ‘வரும்பொறை’, 2 ‘ வுறுவின்றோகை’ ( 1 )