5. முல்லை
(44) புறவணிப் பத்து
434. நன்றே காதலர் சென்ற வாறே மறியுடை மான்பிணை யுகளத் தண்பெயல் பொழிந்த வின்பமு முடைத்தே.
குறிப்பு. மறி-குட்டி. மான்பிணை-பெண்மான்; ஐங். 401 : 1, உகள-துள்ள. தண்பெயல்-குளிர்ந்து மழையை. ( 4 )