437

5. முல்லை

(44) புறவணிப் பத்து


437. நன்றே காதலர் சென்ற வாறே
   ஆலித் தண்மழை தலைஇய
   வாலிய மலர்ந்த முல்லையு முடைத்தே.

    குறிப்பு. ஆலி-ஆலங்கட்டி, மழை தலைஇய-மழையால் பரந்த.
வாலிய மலர்ந்த-வெண்மையுள்ளனவாக மலர்ந்த. ( 7 )