5. முல்லை
(44) புறவணிப் பத்து
438. நன்றே காதலர் சென்ற வாறே பைம்புதற் பல்பூ மலர இன்புறத் தகுந பண்புமா ருடைத்தே.
குறிப்பு. பைம்புதல்-பசுமையான புதரில். இன்புறத் தகுந-இன்பமடையத் தக்கதான. மார் : அசைநிலை. ( 8 )