5. முல்லை
(44) புறவணிப் பத்து
439. நன்றே காதலர் சென்ற வாறே குருந்தங் கண்ணிக் கோவலர் பெருந்தண் ணிலைய பாக்கமு முடைத்தே.
குறிப்பு. குருந்தங்கண்ணிக் கோவலர்-குருந்த மலராலான மாலையைத் தலையிலணிந்த இடையரது. நிலைய-நிலையையுடைய. பாக்கம்-முல்லை நிலத்து ஊர்; பக்கத்துள்ள ஊருமாம். ( 9 )