462

5. முல்லை

(47) தோழி வற்புறுத்த பத்து


462.ஏதில பெய்ம்மழை காரென 1மயங்கிய
   பேதையங் கொன்றைக் கோதைநிலை நோக்கி
   2எவனினி மடந்தைநின் கலிழ்வே நின்வயின்
   தகையெழில் வாட்டுந ரல்லர்
   முகையவிழ் புறவி னாடிறந் தோரே.

     எ-து ‘பருவங்கண்டு வேறுபட்ட கிழத்தியைத் தோழி, பருவ
மன்று? என வற்புறீஇயது.

    குறிப்பு. ஏதில-அயன்மையையுடையதாகி : குறுந்,. 194 : 4.
காரென-கார்காலம் என்று கருதி. பேதையங்கொன்றை-அறியாமை
யையுடைய கொன்றை மரத்தினது. கோதை-மாலைவடிவான பூங்
கொத்தை. கொன்றைக்கோதை : ஐங். 497 : 1; பரி. 14 : 10;
திணைமா. 109. எவன்-ஏன்? மடந்தை : விளி. கலிழ்வு-கலக்கம்,
கொன்றை பேதைமையால் கார் அல்லாக் காலத்திலும் மலர்தல்;
நற். 99 : 8-10; குறுந். 66, 183 : 1-2. நாடிறந்தோர் எழிலை
வாட்டுநர் அல்லர்; கலித். 11 : 20.

    (பி-ம்.) 1 ‘மயங்கிப் ? 2 ‘எவனனி ? ( 2 )