464

5. முல்லை

(47) தோழி வற்புறுத்த பத்து


464. கண்ணெனக் கருவிளை மலரப் பொன்னென
    இவர்கொடிப் பீர1மிரும்புதன் மலரும்
    அற்சிர மறக்குந ரல்லர்நின்
    நற்றோண் 2மருவரற் குலமரு வோரே.

     எ-து வரைந்த அணுமைக்கண்ணே பிரிந்த தலைமகன் குறித்த
பருவம் வந்துழி, ‘இதனை மறந்தார்? என்ற தலைமகட்குத் தோழி
‘வரைவதற்கு முன்பு இவரன்புடைமை அதுவாகலான் மறத்தல்,
கூடாது? எனச் சொல்லி வற்புறீஇயது.

    குறிப்பு. கண்ணென-கண்ணைப் போல. கருவிளைக்குக் கண் :
?கருவிளை கண்மலர்போற் பூத்தன? (கார். 9). பீரம்-பீர்க்கம்பூ.
பீர்க்கம் பூவிற்குப் பொன் உவமை. அற்சிரம்=அச்சிரம்-முன்பனிக்
காலத்தை; ஐங். 223 : 4, குறிப்பு. மருவரல்-சேர்தல். உலமருவோர்-
சுழலுவோர்; உலமரல் : உரிச்சொல்; புறநா. 207 : 11, உரை. உல
மருவோர் மறக்குநர் அல்லர்

   (பி-ம்.) 1 ‘மிகும்புதன்? 2 ‘மறுவரற்? ( 4 )