எ-து பருவங்கண்டு வேறுபட்ட தலைமகளை வேந்தன் வினை
முடித்தானெனக்கேட்ட தோழி, ‘வருவர்’ என வற்புறீஇயது.
(ப-ரை.) ‘நீரிகுவன்ன’ என்றது ................
குறிப்பு. நீர் இகுவன்ன-நீரின் தாழ்ச்சியை யொத்த; இகுதல்-
தாழ்தல்; மலைபடு. 226 ; குறுந். 109 : 2 ; அகநா. 82 : 5, 112 : 14,
274 : 2. கடைஇ-வேகமாகச் செலுத்தி. தேரின்வேகத்துக்கு நீரின்
வேகம் : “குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக” (குறுந். 189 : 2),
அகலம்-மார்பை. செருவெங்குருசில்-போரை விரும்பும் தலைவன்.
குருசில் பகை தணிந்தனன், வருவர். ‘நீரிகுவன்ன’ என்றது இடை
வழியில் தங்காமல் இடையறாது தேரைச் செலுத்தி இங்கு வருவர்
என்றவாறு. (பி-ம்.) 1 ‘நீரிரிகுவன்ன’ ( 5 )