466

5. முல்லை

(47) தோழி வற்புறுத்த பத்து


466. வேந்துவிடு விழுத்தொழி லெய்தி யேந்துகோட்
    டண்ணல் யானை யரசுவிடுத் தினியே
    எண்ணிய நாளகம் வருதல் பெண்ணியல்
    காமர் சுடர்நுதல் விளங்கும்
    தேமொழி யரிவை தெளிந்திசின் யானே.

     எ-து பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளை, ‘அவர் போன
காரியம் இடையூறின்றி முடித்துவருதல் பல்லாற்றானும் தெளிந்
தேன்? எனத் தோழி சொல்லி ஆற்றுவித்தது.

    குறிப்பு. யானையையுடைய அரசு. நாளகம்வருதல்-நாளில்
வருதல். காமர்-அழகிய. அரிவை : விளி. தெளிந்திசின் - தெளிந்
தேன் ; இசின் ; தன்மைக்கண் வந்தது. யான் வருதலைத் தெளிந்தி
சின். ( 6 )