467

5. முல்லை

(47) தோழி வற்புறுத்த பத்து


467. புனையிழை நெகிழச் சாஅய் நொந்துநொந்
    தினையல் வாழியோ விகுளை வினைவயின்
    சென்றோர் நீடினர் பெரிதெனத் தங்காது
    நம்மினும் விரையு மென்ப
    வெம்முரண் யானை விறற்போர் வேந்தே.

    எ-து தலைமகன் வினைவயிற் பிரிய ஆற்றாளாகிய தலைமகளைத்
தோழி வற்புறீஇயது.

   (ப-ரை.) ‘சென்றோர்நீடினர் பெரிது’ என்பது.....................

   குறிப்பு. சாஅய்-மெலிந்து. இனையல்-வருந்தாதே. இகுளை
என்றது தலைவியை நோக்கி, சென்றோர்-சென்ற தலைவன். இகுளை
நீடினர் பெரிதென இனையல், வேந்து விரையுமென்ப. ( 7 )