470

5. முல்லை

(47) தோழி வற்புறுத்த பத்து


470. இருநிலங் குளிர்ப்ப வீசி யல்கலும்
   அரும்பணி யளைஇய 1வற்சிரக் காலை
   உள்ளார் காதல ராயி னொள்ளிழை
   சிறப்பொடு விளங்கிய காட்சி
   மறக்க விடுமோநின் மாமைக் கவினே.

    எ-து பருவம் வந்ததுகண்டு தாம் குறித்த இதனை மறந்தாரென
வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.

    குறிப்பு. அல்கலும்-நாடோறும். பனியளைஇய அற்சிரம் : ஐங்.
223 : 4, குறிப்பு. ; குறுந். 68 : 3, 76 : 6. உள்ளார்-நினையார். ஒள்
ளிழை : விளி. காதலர் உள்ளாராயினும் நின் மாமைக்கவின் நின்னை
மறக்க விடுமோ.

     (பி-ம்) 1 ‘வச்சிரக் காலை? ( 10 )

(47) தோழி வற்புறுத்த பத்து முற்றிற்று.