472

5. முல்லை

(48) பாணன் பத்து


472. கைவல் சீறியாழ்ப் பாண நுமரே
   செய்த பருவம் வந்துநின் றதுவே
   எம்மி னுணரா ராயினுந் தம்வயின்
   பொய்படு கிளவி நாணலும்
   எய்யா 1ராகுத னோகோ யானே.

     எ-து குறித்த பருவம் வரவும் தலைமகன் வாரானாகியவயழித்
தூதாய் வந்த பாணற்குத் தோழி கூறியது.

    குறிப்பு. கைவல் சீறியாழ்ப்பாண-பண்ணை வாசித்தலில் வல்ல
சிறிய யாழையுடைய பாணணே. நுமர் என்றது தலைவனை ; குறித்த
பருவத்து வாராமையால் வேறுபடுத்தி, ‘நுமர்? என்றாள். நாணலும் ;
உம்மை : அசைநிலை எய்யாராகுதல்-அறியாராகுதலின், நோகோ-
நோவேனோ.

   (மேற்,) மு. இது குறித்த பருவத்துத் தலைவன் வாராதவழித்
தூதாய்வந்த பாணற்குத்தோழி கூறியது. (தொல். கற்பு,. 9 ந)

    (பி-ம்.) 1 ‘ராக? ( 2 )