எ-து ‘தலைமகன் பிரிந்தநாட்டிற் செல்வேம்? என்ற அவன்
பாணற்குத் தலைமகள் சொல்லியது
குறிப்பு. குருசில் உள்ளி-தலைவனை நினைந்து. செலவு நீ
நயந்தனையாயின்-செல்லுதலை நீ விரும்பினையாயின் ; முருகு. 64.
படர்-நோயை. பொய்வலாளர்-பொய் கூறுதலில் வல்லவனான
தலைவன். கைவல் பாண ; ஐங் 472 : 1. எம்மை மறவாதீமே ; மே :
அசைநிலை.
(மேற்.)மு. இது தூதுவிடக்கருதி தலைவி கூறியது. (தொல்.
கற்பு. 6, ந.). ( 3 )