5. முல்லை
(50) 1வரவுச்சிறப்புரைத்த பத்து
491. காரதிர் காலையா மோவின்று நலிய நொந்துநொந் துயவு முள்ளமொடு வந்தனெ மடந்தைநின் னேர்தர விரைந்தே.
எ-து வினைமுற்றிப் புகுந்த தலைமகன் தலைவிக்குச் சொல்லியது. உயவும் உள்ளமொடு-வருந்துகின்ற மனத்தொடு, வந்தனெம்-வந்தோம் மடந்தை : விளி. ஏர்-அழகை. (பி-ம்.) 1 ‘வரவு சிறப்பு? ( 1 )