492

5. முல்லை

(50) 1வரவுச்சிறப்புரைத்த பத்து


492. நின்னே போலு மஞ்ஞை யாலநின்
    நன்னுத னாறு முல்லை மலர
    நின்னே போல மாமருண்டு 1நோக்க
    நின்னே யுள்ளி வந்தனென்
    நன்னுத லரிவை காரினும் விரைந்தே.

இதுவுமது.

    குறிப்பு. நின்னே போலும்-உன்னைப்போன்ற. முல்லை நாற்ற
முடையது. நுதல் :குறுந். 323 : 4-5; அகநா. 43 : 9-10, மா-
மான்கள். நின்னே யுள்ளி-உன்னையே நினைந்து. அரிவை :விளி.
காரினும் மேகத்தினும். காரென விரைதல் : ?காரெனக் கடிது
சென்றான்? (கம்ப, குகப். 39)
   (பி-ம்.) 1 ‘நோக்கி? ( 2 )