5. முல்லை
(50) 1வரவுச்சிறப்புரைத்த பத்து
493. ஏறுமுரண் சிறப்ப வேறெதிரிரங்க மாதர் மான்பிணை மறியொடு மறுகக் 1கார்தொடங் கின்றே காலை நேரிறை முன்கைநின் னுள்ளியாம் வரவே.
இதுவுமது,.
குறிப்பு. ஏறு-முன்னது இடி; பின்னது ஆண் எருமை. மாதர்-அழகிய. மான்பிணை-பெண்மான். மறி-குட்டி. மறுக-சுழல. நேர் இறைமுன்கை : விளி; ஐங். 384 : 5, குறிப்பு. யாம்வர. கார் தொடங்கின்று
(பி-ம்.) 1 ‘கார்தொடங் கின்றால்? ( 3 )