5. முல்லை
(50) 1வரவுச்சிறப்புரைத்த பத்து
494. வண்டுதா தூதத் தேரை தெவிட்டத் தண்கமழ் புறவின் முல்லை மலர இன்புறுத் தன்று பொழுதே நின்குறி வாய்த்தனந் தீர்கினிப் படரே.
இதுவுமது
குறிப்பு. தாதூத-தாதை நுகர, தேரைதெவிட்ட ஐங். 453 : 1, குறிப்பு. இன்புறுத்தன்று-இன்பத்தைக் கொடுத்தது. குறிவாய்த் தனம்-குறிப்பை வாய்ப்பச் செய்தனம். இனிப்படர் தீர்க. ( 4 )