(ப-ரை.) அலவன் மண்ணளை நிறைய நெல்லின்பூ உறைக்கும்
ஊரனென்றது தலைவன் மனையிடத்து உளவாகிய வருவாய்ச்சிறப்புக்
கூறியதெனக்கொள்க.
குறிப்பு. வேப்பு நனை-வேம்பின் அரும்பு. நண்டின் கண்ணுக்கு
வேம்பு நனை: ?வேப்புநனை யன்ன விருங்கணீர்ஞெண்டு? (அகநா.
176:8). நண்டினுடைய வளை நிறையும்படி . உறைக்கும்-உதிரும்.
(மேற்.) மு. மருதத்துக்குறிஞ்சி நிகழ்ந்தது; தோழி அறத்தொடு
நின்றது (தொல். அகத். 12, ந.)
களவன்பத்து முற்றிற்று ( 10 )