497

5. முல்லை

(50) 1வரவுச்சிறப்புரைத்த பத்து


497.  குறும்பல் கோதை கொன்றை மலர
    நெடுஞ்செம் புற்ற மீயல் பகர
    மாபசி மறுப்பக் கார்தொடங் கின்றே
    பேரிய லரிவைநின் னுள்ளிப்
    போர்வெங் குருசில் வந்த மாறே.

இதுவுமது.

      குறிப்பு. குறும்பல்-குறியபல, கோதை கொன்றைமலர-
மாலையாகக் கொன்றைப்பூ மலர ; ஐங். 462 : 2, குறிப்பு நெடுஞ்செம்
புற்றம்-நெடிய சிவந்த புற்று. ஈயல் பகர-ஈசல்களை அளிக்க.
புற்றில் ஈயல் : ஐங். தனிப்பாடல், 4. அரிவை : விளி, வந்தமாறு-
வந்ததால்; மாறு-ஏதுப் பொருளதோரிடைச் சொல், வந்தமாறு
கார் தொடங்கின்று. ( 7 )