498

5. முல்லை

(50) 1வரவுச்சிறப்புரைத்த பத்து


498. தோள்கவி னெய்தின தொடிநிலை நின்றன
    நீள்வரி நெடுங்கண் வாள்வனப் புற்றன
    ஏந்துகோட் டியானை வேந்துதொழில் விட்டென
    விரைசெல னெடுந்தேர் கடைஇ
    வரையக நாடன் வந்த மாறே.

இதுவுமது.

      குறிப்பு. தோளும் தொடியும்: ஐங். 475 : 1, வாள் வனப்பு-
ஒளி மிக்க அழகை. ஏந்திய கோட்டையுடைய. விட்டென-விட.
கடைஇ-செலுத்தி. வந்தமாறே தோள் கவின் எய்தின. ( 8 )