எ-து வாயில் பெற்றுக் கூடியிருந்த தலைமகற்குத் தோழி நகை
யாடிச் சொல்லியது.
குறிப்பு. பிணையல் தைஇ-மாலை புனைந்து, செவ்விரல் சிவந்த-
இயற்கையாகச் செம்மையுள்ள விரல் மிகச் சிவந்த; ?செவ்விரல்
சிவப்பூர? (கலித். 76 : 6). இனைய-வருந்த. எவ்வாய்-எவ்விடத்தை.
முன்னின்று-கருதியது. ( 2 )