54

(6) தோழிக்கூற்றுப் பத்து


54. திண்டேர்த் தென்னவ னன்னாட் டுள்ளதை
  வேனி லாயினுந் தண்புன லொழுகும்
  1தேனூ ரன்னவிவ டெரிவளை நெகிழ
  ஊரி னூரனை நீதர வந்த
  2பஞ்சாய்க் கோதை மகளிர்க்
  கஞ்சுவ லம்ம வம்முறை வரினே. 

  எ-து வாயில் வேண்டிவந்த தலைமகற்குத் தலைமகள் குறிப்
பறிந்த தோழி அவன் கொடுமை கூறி வாயில் மறுத்தது.

  குறிப்பு. தென்னவன்-பாண்டியன். உள்ளதை; ஐ:சாரியை.
தேனூர் - மதுரைக்கு அருகிலுள்ள ஓருர். தலைவி தேனூரன்னள் :
ஐங், 55 : 2. ஊரின் - பரத்தையர் சேரியிடத்தே தேர்ஊர்ந்து செல்வா
யாயின். ஊரனை : ஐகாரம் முன்னிலையை விளக்கிநின்றது ; புறநா.
5, உரை ; அசை நிலையாக்கி விளியாகக் கொள்ளலுமாம் ; புறநா.40,
உரை. பஞ்சாய்க்கோதை - தண்டான் கோரையின் நாராற் புனைந்த
மாலை; ?பஞ்சாய்க் கூந்தல்? என்பர் பின்னும்; ஐங். 76 : 1, மகளிர்
-பரத்தையர். அம்முறையென்றது பிரிவால் பரத்தையர்க்கு வளைநெ
கிழ்தலை. வரின் அஞ்சுவல். (பி-ம்.) 1 ‘தேனாறு? 2 ‘பஞ்சாய்?.         ( 4 )