73
(8) புனலாட்டுப் பத்து

 


73. 1வண்ண வொண்டழை நுடங்க வாலிழை
   ஒண்ணுத லரிவை பண்ணை பாய்ந்தெனக்
   2கண்ணுறுங் குவளை நாறித்
   தண்ணென் றிசினே பெருந்துறைப் புனலே.
இதுவுமது.

  குறிப்பு. அரிவை - தலைவி. பண்ணை பாய்ந்தென-விளையாட்டி
டத்தே பாய ; ஐங். 74 : 4. குவளை நாறி-குவளைப்பூப்போல மணங்
கமழ்ந்து. தண்ணென்றிசின்-தண்ணென்றது ; இசின் : அசை.

  (மேற்.) அடி,4 ‘முற்றுச்சொல் சின் அசைக்கண் படுதல்’
(தொல். இடை 47, .) மு. ‘இஃது உருவுவமப் போலி; நீ புனலாடிய
ஞான்று பரத்தை பாய்ந்தாடிய புனலெல்லாம் தண்ணென்றதெனக்
கூறியவழி, அத்தடம்போல் இவள் உறக்கலங்கித் தெளிந்து தண்
ணென்றாளென்பது கருதியுணரப்பட்டது. அவளொடு புனல் பாய்ந்
தாடிய இன்பச் சிறப்புக் கேட்டு நிலையாற்றாளென்பது கருத்து,’
(தொல். உவம. 25, பேர்.)

 (பி-ம்.) 1 ‘வண்ண வெண்டழை’ 2 ‘கண்ணுறுங் குவளை’, ‘தண்
ணென் குவளை’       ( 3 )